ரௌத்திரம் பழகு

மரம் நடுவோம்... உள்ள மரங்களை காப்போம்..

வியாழன், 12 மே, 2016

நோட்டா - None Of The Above (யாருக்கும் வாக்களிக்கவில்லை)

வணக்கம்!

நோட்டா - பலருக்கு பரிச்சையமான வார்த்தையாக இருந்தாலும் இன்னும் பலருக்கு தெரிவதில்லை. நோட்டாவை பற்றி அறிந்தவர்களில் பலருக்கு சரியான புரிதல் இல்லை. எனவே இங்கு சற்று விரிவாக பார்ப்போம். நோட்டவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய தேர்தல் ஆணையம் 100% வாக்குபதிவிற்கு மட்டமே கவனம் செலுத்திவருகிறது. ஊடகங்களும் முன்னெடுப்பதில்லை என்பதால் நான் இங்கே விரிவாக பதிவிடுகின்றேன்.

நோட்டா என்பது என்ன?

யாருக்கும் வாக்களிக்கவில்லை என்று வேட்பாளர்களை புறக்கணிப்பதற்காக நமக்கு தரப்பட்டுள்ள உரிமைதான் இந்த நோட்டா.

சரி யாருக்கும் வாக்களிக்காமல் இருந்தால் நாம் வாக்கு வீண்தானே?

நம்மில் பலருக்கு இந்த சந்தேகம் வருவது இயல்பே. நீங்கள்  தகுதியான, திறமையான  நல்லவர் களத்தில் இருந்து நோட்டவில் பதிவிட்டால் நிச்சயம் நம் வாக்கு வீண்தான். மாறாக நமக்கு கிடைக்கும் வேட்பாளர்கள் எத்தகையோர் என்பதை விரிவாக பதிவிட தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

நோட்டாவே செல்லாத ஓட்டுன்னு சிலபேர் வாதிடராங்களே? நோட்டல வோட்டு போட்டாமட்டும் திரும்பவும் தேர்தலா நடத்தபோறாங்க?

முதலில் நோட்டாவை செல்லாத வோட்டு என்று சொல்வதே தவறு. நோட்டவில் ஒரு தொகுதியில் நிறைய வாக்குகள் பதிவாகும்போது மறுதேர்தலோ, வேட்பாளர்களை தடை செய்வதோ தற்போது சாத்தியமில்லை. ஆனால், இவையெல்லாம் சாத்தியமாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.


நோட்டா இந்நிலையில் இருக்க காரணம் சட்டம் இயற்றவேண்டிய அரசியல்வாதிகள் தங்களை பாதிக்கும் என செய்யாமல் இருப்பதே..


நோட்டா கடந்து வந்த பாதைகளையும் நினைவில்கொள்ள வேண்டும். முன்பு யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லையென்றால் வாக்குசாவடிக்கு செல்வதை தவிர்க்கவேண்டியதுதான் வழி. பிறகு 49ஓ என்ற வாய்ப்பு தரப்பட்டது. இருப்பினும் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தது. ரகசியமாக வாக்களிக்க இயலாததால் மக்களிடம் அதரவு கிடைக்கவில்லை.

பிறகு நோட்டாவிற்கு தனி பொத்தான் வாக்குபதிவு இயந்திரத்திலேயே வைக்கப்பட்டது. நோட்டாவில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த காலகட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 5 லட்சம் பேர்  நோட்டவில் வாக்களித்ததும், நீலகிரி தொகுதியில் நோட்டா மூன்றாம் இடம் பிடித்ததும் நினைவில் கொள்க. இப்போது தனி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாமே நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரிலேயே சாத்தியமாகிற்று.

இப்படி எல்லாமே சாத்தியமானபோது வரும் காலத்தில் நோட்டாவில் வாக்குகள் அதிகம் பதிவாகும்போது மறுதேர்தல், வேட்பாளர்களுக்கு தடை எல்லாம் சாத்தியமாகும்.. அந்த நாள் வெகுதொலைவில் இல்லை..

இப்பொழுதே இவற்றிற்காக வழக்கு தொடுக்கப்பட்டு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த தேர்தலிலும் இளைஞர்கள்  பலர் குறிப்பாக முதல் வாக்காளர்கள் நோட்டவையே தங்கள் ஆயுதமாக கையில் எடுத்துள்ளனர். இது பொறுக்காமல்தான் அரசியல் கட்சியினர் ஏற்கனவே நோட்டவில் பதிவான வாக்குளையும் கண்டு ஏற்பட்ட அச்சம் காரணமாகவே நோட்டவை இருட்டடிப்பு செய்ய செல்லாதவோட்டு என்று பரப்பதுவங்கியுள்ளனர்.

சரி, வழக்கத்துக்கு மாறாக இந்தமுறை அவ்வளவு வாய்ப்புகள் நமக்கு உண்டே, அப்பவும் நோட்டாவில்தான்  வாக்கு செலுத்தவேண்டுமா?


திமுக, அதிமுகவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டாம் என்பதை விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். எனவே மக்கள் நலக்கூட்டணி பற்றி பார்ப்போம். மக்கள் நல கூட்டணியை சேர்ந்த அணைத்து கட்சிகளும் இந்த இரண்டு கட்சிகளுடன் இவ்வளவு காலம் கூட்டணி வைத்தவர்கள்தான். இருவருடைய பண்புகளுடன், இவர்கள் சொந்த பண்புகளும் சேர்ந்து இருப்பின் மிக பெரிய வரலாற்று பிழையை செய்ததுபோல் ஆகிவிடும் என்பது பரவலாக பலரின் எண்ணவோட்டமாக உள்ளது. இதுதவிர இவர்களிடமும் பல முரண்பாடுகள் தங்களுக்குள்ளேயே உண்டு.

அடுத்து பாமக, இவர்களின் இத்தனை ஆண்டுகால சாதி அரசியல் ஒன்றே இவர்களை விளக்க போதுமானது. தவிர தங்கள் கட்சியை வளர்க்கவும், தங்களை வளர்க்கவும் திமுக, அதிமுக உடன் கடந்த காலங்களில் மாறி  மாறி கூட்டனி வியாபாரம் செய்தவர்கள்தான்.

பாஜாக, இவர்கள் மத்தியில் ஆட்சியை பிடிக்கும்முன் சொன்ன வாக்குறிதியான அந்த 15 லட்சம் ஒவ்வொருவர் கணக்கிலும் செலுத்திவிட்டு வந்து வாக்குகேட்டாலும் பரவயில்லை, அதுவும் இல்லை. மாறாக ஆட்சிக்கு வந்தபின் இவர்களின் மதவாத அரசியலைதானே காட்டினார்கள்.

நாம் தமிழர், சாதி, மத அரசியலில் இருந்து மக்கள் விழித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டதால் புதிதாக இனப்பிரிவினை மூலம் மக்களை பிரித்துவைக்கவும், சண்டையிட்டுகொள்ளவும், அரசியல் களமாடி வரும் இவர்களை கடைசியிடத்திற்க்கு தள்ளுவதே சரி. கடந்த தேர்தலில் அதிமுகவை எதற்காக ஆதரித்தார்கள்? இப்போது எதற்காக எதிர்க்கிறார்கள் என்பதை வைத்து முடிவு செய்துகொள்ளலாம்.

இதர சாதிக்கட்சிகள் தனியாக சில தொகுதிகளில் நிற்கிறார்கள், அவர்களால் பிரிவினைவாதத்தைகூட இனி வரும் காலங்களில் செய்ய முடியாது என்பதால் ஒதுக்கிவிடுவோம்.

(இந்த தேர்தலிலும் இளைஞர்கள் பலர் களம் காண்கின்றனர். அவர்களின் செயல்பாடுகள் திருப்த்திகரமாக இருந்தால் வாக்களியுங்கள் அல்லது நோட்டவில் வாக்களியுங்கள். வாக்களிக்காமல் இருக்கவேண்டாம்.)இதனால்தான் நோட்டவில் வாக்களிக்கவேண்டும் என்கின்றேன். தவிர நோட்டவில் அதிகமாக வாக்குகள் பதிவாகும்போது அரசியல் கட்சிகளிடம் பயம் வரும். நிச்சயம் அவர்கள் தங்கள் வேட்பாளர்கள் தேர்வில் நல்லவர்களுக்கு வாய்பளிப்பார்கள். எனவே இதனை தொலைநோக்கு பார்வையுடன் அணுகவேண்டும். நம்மேல் அரசியல் கட்சிகளுக்கு பயம் வர நம்மிடம் உள்ள வலுவான ஆய்தம் இந்த நோட்டா. எனவே வாய்ப்பை பயன்படுத்துவோம். நோட்டை வீசினால் வாக்களிப்பார்கள் என்று என்னும் கட்சிகளிடம், மாற்றம் வர நோட்டா என்னும்  ஆயுதத்தை பயன்படுத்துவோம்.

நன்றி.