ரௌத்திரம் பழகு

மரம் நடுவோம்... உள்ள மரங்களை காப்போம்..

புதன், 16 நவம்பர், 2011

எல்பிஜி சிலிண்டர் காலாவதியாகும் தேதி?

நீங்கள் எப்போதாவது எல்பிஜி சிலிண்டர் காலாவதியாகும் தேதிபற்றி அறிந்ததுண்டா?

காலாவதியான சிலிண்டர்கள் பயன்படுத்த பாதுகாப்பானது அல்ல மற்றும் அவை விபத்துகளுக்கு காரணமாக இருக்கலாம். இது சம்பந்தமாக விற்பனையாளரிடம் இருந்து சிலிண்டரை பெறும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இங்கே நாம் எல்பிஜி சிலிண்டர் காலாவதியாகும் தேதியை எப்படி தெரிந்துகொள்வது என்று பார்ப்போம்...

ஒரு சிலிண்டரின் மூன்று பக்க தண்டுகளில் ஒரு பக்கதண்டில் கலாவதி தேதியானது ஆங்கிலஎழுத்துக்கள் (Alphabet) பின்வருமாறு A அல்லது B அல்லது C அல்லது D என்றும் மற்றும் இரட்டைஇலக்க எண்ணாலும் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணம்: D-06.

ஆங்கிலஎழுத்துக்கள் பின்வருபவற்றை குறிக்கிறது.

1. A என்பது மார்ச் (முதல் காலாண்டு)
2. B என்பது ஜூன் (இரண்டாம் காலாண்டு)
3. C என்பது செப்டம்பர் (மூன்றாம் காலாண்டு)
4. D என்பது டிசம்பர் (நான்காம் காலாண்டு)







இரட்டைஇலக்க எண்கள் செல்லுபடியாகும் வருடத்தை குறிக்கிறது. இங்கே D06 என்பது 2006 டிசம்பர் (நான்காம் காலாண்டு) வரை செல்லத்தக்கது.


ஒரு விற்பனையாளர் காலவதியான சிலிண்டரை தருவதன்மூலம் கசிவு உட்பட அபாயகரமான விபத்துகளுக்கு ஏதுவாகின்றார். நீங்கள் அவ்வாறான சிலிண்டரை பெற நேர்ந்தால் தயவுசெய்து உடனடியாக அதை திருப்பி குடுத்துவிடுங்கள்.


ஏற்கத்தக்க சிலிண்டருக்கான உதாரணம் D13. இது சிலிண்டர் செல்லுபடி ஆகத்தக்க காலமாக டிசம்பர் 2013 ஐ குறிக்கிறது.


விழிப்புணர்வை உருவாக்க அனைவரிடமும் இந்த செய்தி சென்று சேர உதவுங்கள்.

மின்னஞ்சல் மூலம் எனக்கு பகிர்ந்த தோழருக்கு நன்றி...

அன்புடன்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

எது சுதந்திரம்? ஏது சுதந்திரம்?

வணக்கம்



நாட்டின் 65வது சுதந்திரதினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் சுதந்திரதின கொண்டாட்டம் குறித்த எனது கருத்துக்கள் இங்கே...







நிச்சயம் நான் சுதந்திரதின கொண்டாட்டத்திற்க்கோ, இந்திய நாட்டிற்கோ எதிரானவன் இல்லை.

ஏது சுதந்திரம்?
 
ஆகஸ்ட் 15, சுதந்திரம் பெற்ற மக்களாக நாம் அங்கீகரிக்கப்பட்ட நாள், உண்மையில் இந்த நாளை கொண்டாடும் நிலையில்தான் நாமிருக்கிறோமா?


சுதந்திரபோரட்டத்தில் பல்வேறு இன்னல்களுக்கிடையே பலரது உயிர், உடமை தியாகத்திற்கு பலனாக கிடைத்த சுதந்திரத்தினை, சுதந்திரபோராட்ட தியாகிகளின் விரத்தை போற்றும்வகையிலும் கொண்டாடிவருகிறோம். நிச்சயம் அவர்களது வீரசெயல் நினைவுகூறத்தக்கது.



மறுக்கப்பட்ட நீதிகளை கடந்தகாலங்களில் அதிகமாக கண்டுவருகின்றோம். ஒரு போராட்டத்தின் மூலம் சுதந்திரம் அடைந்த நம்நாடு, ஒரு இனத்தின் சுதந்திரத்திற்கான போராட்டத்தை தடைசெய்ய வரிந்துகட்டி செயல்பட்டதை கண்டோம். சுதந்திர இந்தியாவில், சுதந்திரமாக நமது கருத்துக்களை வெளியிடக்கூடாது, மீறினால் சிறைவாசம்...


தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்பதற்காய், யாருக்கும் வாக்களிக்கவிரும்பவில்லை என்பவர்களும் வாக்களிக்கும்விதமாய் இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறைபடுத்திய ஒரு வழிமுறையான 49ஓ பயன்படுத்தியவர்களை நக்சலைட்டுகளா என சோதனைசெய்த ஆட்சியாளர்களை பெற்றபெருமை நம்மையே சேரும்...





இது இப்படி இருக்க அந்த சுதந்திரதினத்தையாவது சுதந்திரமாக கொண்டாடமுடிகிறதா நம்மால்? ஊடகங்களில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் செய்தி "சுதந்திரதின கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி, நாடுமுழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு, வரலாறுகாணாத பாதுகாப்பு." 



இதுதான் ஒரு நாடு சுதந்திரதினத்தை கொண்டாடும்முறையா?


எது சுதந்திரம்...

இப்படிப்பட்ட குறைகளை களைந்து மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுக்கும் ஆட்சியாளர்களை என்று நாம் பெருகின்றோமோ, நீதி சாதாரனமக்களுக்கும் என்று முறையாக கிடைக்கிறதோ, என்று மனிதர்கள் அனைவரும் சமமாக மதிக்கபடுகின்றனரோ, அச்சுறுத்தல் இன்றி என்று சுதந்திரதினத்தை கொண்டாடுகின்றோமோ? அதுவே நமக்கு சுதந்திரதினம்....

அதுவரை இந்த சுதந்திரதினம், சுதந்திரபோரட்ட தியாகிகளை நினைவுகூரும் நாளாக,சுதந்திரத்தை போற்றும் நாளாக மட்டுமே இருக்கும்.

அனைவருக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துகள்...

வந்தே மாதரம்...

புதன், 2 மார்ச், 2011

இரத்ததானம் செய்வோம்

வணக்கம்

மீண்டும் ஒரு பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த பதிவில் இரத்ததானத்தின் தேவை, தகுதி, பலன்கள் பற்றி காண்போம்.

இரத்ததானத்தின் அவசியம்




இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு பல்வேறு நோய் தாக்குதலினாலும் , விபத்துகளினாலும், அறுவை சிகிச்சை போன்ற வேறு சில காரணங்களினாலும் உடலில் இரத்தம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.



 
குருதியின் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் குருதி தானம் முன்பைவிட அதிகரித்துள்ளபோதும், குருதி தேவைகள் நிறைவடைவதில்லை.
குருதி தேவைகளை நிறைவு செய்திட மனமுவந்து அனைவரும் குருதி தானம் செய்ய வேண்டும்.

 

 இன்னுயிர் காப்பவர் இறைவனுக்கு சமம்

நீங்கள் குருதி தானம் செய்வதால் ஒருவர் உயிரையே காப்பாற்றும் வாய்ப்பினை பெறுகிறீர்கள். அப்படியானால் நீங்கள் கடவுளுக்கு சமமானவர்தானே?




இரத்ததானம் செய்வதற்கான தகுதி
 

18 வயது முதல் 60 வயது வரை 45 கிலோவிற்கு மேல் எடையுள்ள ஆண்களும், பெண்களும் இரத்ததானம் செய்யலாம்.



இரத்ததானம் செய்வதால் நமக்கு ஏதேனும் பாதிப்பு உண்டா?

 # நமது உடலில் 5 முதல் 6 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. இதில் 350 மில்லி இரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. 

# இரத்ததானம் செய்ய 20 நிமிடம் மட்டுமே ஆகும். 30 நிமிடத்திற்கு பிறகு நாம் வழக்கம்போல் செயல்படலாம்.
 
#இரத்ததானம் செய்த 24 மணி நேரத்திற்குள் புது இரத்தம் நமது உடலில் உற்பத்தியாகிவிடும்.  

# 3 மாதத்திற்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம்.


இரத்ததானம் செய்வோர் அடையும் பலன்கள்

# இரத்ததானம் செய்வதால் இரத்த அழுத்தம் குறைகிறது. இதனால் மாரடைப்பு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

# இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

இரத்ததானம் எங்கே செய்யலாம்?

அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும், குருதி வங்கிகளிலும் இரத்ததானம் செய்யலாம். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிறப்பான பங்களிப்பை செய்துவருகின்றன. நானும் நண்பர்களுடன் இணைந்து

பேஸ்புக் மூலமாக ஒரு குழுவினை அமைத்து குருதி கொடையாளர்களை ஒருங்கினைத்துள்ளோம்.

http://www.facebook.com/home.php?sk=group_105137816233511&view=doc&id=107321579348468#!/home.php?sk=group_105137816233511&ap=1





குருதி தானம் செய்வோம்....ஒரு உயிரை காப்பதில் நமது பங்களிப்பை உறுதிசெய்வோம். 


நன்றியுடன்


அல்போன்ஸ் சேவியர்

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

சாலை விதிமுறை மீறல்கள் ஒரு பார்வை

வணக்கம்

தினமும் சாலைவிபத்தை காண்பது என்பது வழக்கமாகிவிட்டது. பெருகிவரும் சாலை விபத்துகளுக்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.



சாலை போக்குவரத்தில் நமக்கு பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதை மீறுவதில் என்ன சுகம் இருக்கிறது?எல்லோரும் எதாவது ஒரு அவசர வேலையாகத்தான் செல்கிறோம். அதற்காக சாலை விதிகளை மதிக்காமல் செல்வதால்தான் விபத்துக்கள் அதிகரிக்கிறது.

தினசரி நாம் காணும் விதி முறை மீறல்கள்:

1. வெகு சிறிது தூரத்தில் உள்ள திருப்பத்திற்கு சென்று வாகனத்தை திருப்பிவராமல் ஒருவழிப்பாதையை தவறாக உபயோகபடுத்துதல்.

ஒரு வழிப்பாதையை தவறாக பயன்படுத்துவதனால் அந்த பாதையில் சரியாக வருபவர் எதிர்திசையில் ஒருவர் வருவார் என்று கணிக்காமல் தன் வாகனத்தை செலுத்தும்போது சுதாரிக்க இயலாமல் விபத்து ஏற்படுகிறது.

2. போகுவரத்து குறியீடுகளை (சிக்னல்) மதிக்காமல் செல்லுதல், குறிப்பிட்ட இடத்திற்குள் நிற்காமை.

போக்குவரத்து குறியீட்டில் சிகப்பு விளக்கு ஒளிரும்போது வாகனம் சாலையில்உள்ள வெள்ளை கோட்டிற்குள் நிறுத்தபட்டிருக்கவேண்டும். ஆனால் நாம் வெள்ளை கோட்டினை தாண்டி பாதசாரிகள் கடப்பதற்கு உண்டான கோடுவரை சென்று நிறுத்தும் போது, பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு அல்லபடுகின்றனர்.

தினசரி நான் காணும் காட்சி, நிறுத்தர் குறியீடு (சிகப்பு விளக்கு) இட்ட பிறகும், வாகனங்கள் செல்வதற்கு உண்டான பச்சை விளக்கு ஒளிர்வதற்கு முன்னும் 10 வினாடிகள் வரை தங்களது வாகனத்தை மக்கள் செலுத்துகின்றனர். இதனால் எதிர் திசையில் வரும் வாகனத்துடன் விபத்து ஏற்படுகிறது.

3.அளவிற்கு அதிகமான சுமைகளை ஏற்றிசெல்வது, அனுமதிக்கப்பட்டதை விட்டு வாகனத்தின் வெளியேவரும்படி சுமைகளை ஏற்றிசெல்வது, அனுமதிக்கப்பட்டதை விட அதிக நபர்களை ஏற்றிசெல்வது.

இதுபோல் சுமைகளை ஏற்றிசெல்லும்போது தூரத்தில் வரும்போது வாகன ஓட்டுனர்களுக்கு தெரிவதில்லை. அருகில் வரும்போது கட்டுபடுத்த இயலுவதில்லை. முடிவு விபத்து.


அதிகபடியான நபர்களைவாகனத்தில் ஏற்றிசெல்வது விபத்திற்கு வழிவகுக்கும்.

4. கட்டுபாடற்ற வேகம்

கட்டுபாடற்ற வேகம்  அந்த வாகனத்தில் செல்பவர்மட்டுமின்றி சாலையில் செல்லும் மற்றவர்களையும் விபத்திற்கு உட்படுத்துகிறது.


வாகனத்தை செலுத்தும்போது முறையான குறியீடுகளை காட்டாமல் வலது, இடது என வழிகிடைக்கும் சிறு சிறு சந்துகளில் புகுந்து சென்று சாலைகளில் செல்வோரை அச்சுறுத்தாதவண்ணம் வாகனத்தை செலுத்துவது நன்று. 

5. அலட்சியம் செய்யாமல் வாகனத்தை செலுத்த வேண்டும்.

வாகனத்தில்  செல்லும்போது கைபேசியில் (செல் போன்) பேசிக்கொண்டே ஓட்டகூடாது. குடிபோதையில் வாகனம் செலுத்தகூடாது. வேடிக்கை பார்த்துகொண்டோ, வேறுசிந்தனைகளுடன் வாகனத்தை செலுத்துவது தவறாகும்.

















சாலையை கடக்கும்போது இருபுறம் பார்த்து வாகனம் வரவில்லை என்பதை உறுதி செய்து பிறகு கடக்கவேண்டும்.















சாலையை கடப்பதற்கென்று குறிப்பிடப்பட்ட இடத்தில்மட்டும் சாலையை கடக்கவேண்டும்.

அரசு சார்பில் பல விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்படுக்கின்றன.  சாலை பாதுகாப்பு வாரம் என்று கடைபிடிக்கபடுகிறது. போகுவரத்து காவலர்கள் சாலை பாதுகாப்பு வாரத்தின் போது வாகனங்களில் இருந்து காற்று ஒலிப்பானை கழற்றுவது, முகப்பு விளக்குகளில் கருப்பு வண்ண தாளை(ஸ்டிக்கர்) ஒட்டுவது என செயல்படுகின்றனர். 

வாகனத்தில் புறப்படும்போது ஒருமுறை நம்மை அதிகம் நேசிக்கும் நாம் குடும்பத்தினரை கண்முன் நிறுத்தி விட்டு புறப்பட்டோமானால் நம் இலக்கை விபத்தின்றி அடைவோம்.

எது எப்படி இருப்பினும் மக்களாகிய நாம் முடிவெடுத்து விதிகளுக்கு உட்பட்டு வாகனத்தை செலுத்தினால் தான் விபத்துகளை தவிர்க்கமுடியும்.  


தோழமையுடன்
அல்போன்ஸ் சேவியர்