ரௌத்திரம் பழகு

மரம் நடுவோம்... உள்ள மரங்களை காப்போம்..

வியாழன், 11 நவம்பர், 2010

இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள்?

நண்பர்களே வணக்கம்

இந்த தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு?

நீங்கள் உறுப்பினராக இருக்கும் கட்சிக்கா? அல்லது உங்கள் சமயம், சாதி சார்ந்த கட்சிகளுக்கா?

நன்கு யோசியுங்கள். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் பல நல்ல திட்டங்களை தந்துள்ளார்கள் என்பதில் எனக்கு மாற்று கருத்து எதுவும் இல்லை. இருப்பினும் தமிழன் செத்தபோது என்ன செய்தார்கள்?  அட நீங்க ஒன்னும் செய்யவேண்டாம் மக்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்தியவரையும் கைது செய்தீர்களே. ஈழ தமிழனுக்காக போராட்டம் என்றால் வெளிநாட்டு விசயத்தில் தலையிடவேண்டாம் என்றார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த மீனவ தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் போராட்டம் வேண்டாம் என்றார்களே? அவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களா? உங்கள் நல்ல திட்டங்களை அனுபவிக்க நாங்க உயிரோட இருக்கவேண்டியது அவசியம் அல்லவா?. ஒவ்வொரு இறப்பின்போதும் நீங்கள் கடிதம்மட்டும் எழுதியது ஏன்? எத்தனையோ கடிதம் எழுதிய நீங்கள் மத்தியஅரசின் ஆட்சியில் இருந்து விலகமட்டும் ஏன் ஒருகடிதம் கூட எழுதவில்லை? உங்களது பதவி நாற்காலியை காப்பற்றிகொள்ளத்தானே? எங்களை ராஜபக்சேவுக்கு பலிகொடுப்பதுதான் உங்களது கடமையா?

எதிர்கட்சியாக இருந்துகொண்டு எதிரிக்கட்சியாக மட்டும்தான் இங்கு செயல்பட்டுகொண்டிருக்கிறார்கள் நமது எதிர்கட்சிகள். ஒருவருக்கொருவர் எதிர் எதிர் அறிக்கை கொடுபதைதான் தங்கள் கடமையாக நினைகின்றனரே தவிர மறந்தும் மக்கள் பிரச்சனையில் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை.

அணைத்து பொருட்களும் விலைஅதிகரித்துள்ளது. ஒருபக்கம் இலவசம், மறுபக்கம் விலையேற்றம். கொடுப்பதுபோல் கொடுத்து எடுத்துக்கொள்கிறீர்களே. நீங்கள் உண்மையில் ராஜதந்திரிதான். இந்த நிலை எந்த கட்சி ஆட்சிக்குவந்தாலும் மாறப்போவதில்லை.

இப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும்தான் உங்களது வாக்கினை பதிவு செய்யபோகிறீர்களா? சிந்திப்பீர் தமிழினமே. இந்த தேர்தலில் உங்களது வாக்கினை வாங்க எந்தக்கட்சிக்கும் தகுதியில்லை என்று நீங்கள் எண்ணினால் உங்களது வாக்கினை தயவுசெய்து 49ஓ-வில் பதிவுசெய்யுங்கள். வாக்களிக்காமலும் இருக்கவேண்டாம்.

இந்த தேர்தலில் நீங்கள் பதிவுசெய்யும் வாக்கு அரசியல் கட்சிகளை சிந்திக்கவைக்கவேண்டியதாக இருக்கவேண்டும்.எனவே வாக்கு பதிவிற்குமுன்  நன்கு சிந்தியுங்கள்.

பதிவை படித்ததற்கு நன்றி...

தோழமையுடன்...

சேவியர்...
http://www.facebook.com/alphonsexavier

1 கருத்து: