ரௌத்திரம் பழகு

மரம் நடுவோம்... உள்ள மரங்களை காப்போம்..

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

சாலை விதிமுறை மீறல்கள் ஒரு பார்வை

வணக்கம்

தினமும் சாலைவிபத்தை காண்பது என்பது வழக்கமாகிவிட்டது. பெருகிவரும் சாலை விபத்துகளுக்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.



சாலை போக்குவரத்தில் நமக்கு பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதை மீறுவதில் என்ன சுகம் இருக்கிறது?எல்லோரும் எதாவது ஒரு அவசர வேலையாகத்தான் செல்கிறோம். அதற்காக சாலை விதிகளை மதிக்காமல் செல்வதால்தான் விபத்துக்கள் அதிகரிக்கிறது.

தினசரி நாம் காணும் விதி முறை மீறல்கள்:

1. வெகு சிறிது தூரத்தில் உள்ள திருப்பத்திற்கு சென்று வாகனத்தை திருப்பிவராமல் ஒருவழிப்பாதையை தவறாக உபயோகபடுத்துதல்.

ஒரு வழிப்பாதையை தவறாக பயன்படுத்துவதனால் அந்த பாதையில் சரியாக வருபவர் எதிர்திசையில் ஒருவர் வருவார் என்று கணிக்காமல் தன் வாகனத்தை செலுத்தும்போது சுதாரிக்க இயலாமல் விபத்து ஏற்படுகிறது.

2. போகுவரத்து குறியீடுகளை (சிக்னல்) மதிக்காமல் செல்லுதல், குறிப்பிட்ட இடத்திற்குள் நிற்காமை.

போக்குவரத்து குறியீட்டில் சிகப்பு விளக்கு ஒளிரும்போது வாகனம் சாலையில்உள்ள வெள்ளை கோட்டிற்குள் நிறுத்தபட்டிருக்கவேண்டும். ஆனால் நாம் வெள்ளை கோட்டினை தாண்டி பாதசாரிகள் கடப்பதற்கு உண்டான கோடுவரை சென்று நிறுத்தும் போது, பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு அல்லபடுகின்றனர்.

தினசரி நான் காணும் காட்சி, நிறுத்தர் குறியீடு (சிகப்பு விளக்கு) இட்ட பிறகும், வாகனங்கள் செல்வதற்கு உண்டான பச்சை விளக்கு ஒளிர்வதற்கு முன்னும் 10 வினாடிகள் வரை தங்களது வாகனத்தை மக்கள் செலுத்துகின்றனர். இதனால் எதிர் திசையில் வரும் வாகனத்துடன் விபத்து ஏற்படுகிறது.

3.அளவிற்கு அதிகமான சுமைகளை ஏற்றிசெல்வது, அனுமதிக்கப்பட்டதை விட்டு வாகனத்தின் வெளியேவரும்படி சுமைகளை ஏற்றிசெல்வது, அனுமதிக்கப்பட்டதை விட அதிக நபர்களை ஏற்றிசெல்வது.

இதுபோல் சுமைகளை ஏற்றிசெல்லும்போது தூரத்தில் வரும்போது வாகன ஓட்டுனர்களுக்கு தெரிவதில்லை. அருகில் வரும்போது கட்டுபடுத்த இயலுவதில்லை. முடிவு விபத்து.


அதிகபடியான நபர்களைவாகனத்தில் ஏற்றிசெல்வது விபத்திற்கு வழிவகுக்கும்.

4. கட்டுபாடற்ற வேகம்

கட்டுபாடற்ற வேகம்  அந்த வாகனத்தில் செல்பவர்மட்டுமின்றி சாலையில் செல்லும் மற்றவர்களையும் விபத்திற்கு உட்படுத்துகிறது.


வாகனத்தை செலுத்தும்போது முறையான குறியீடுகளை காட்டாமல் வலது, இடது என வழிகிடைக்கும் சிறு சிறு சந்துகளில் புகுந்து சென்று சாலைகளில் செல்வோரை அச்சுறுத்தாதவண்ணம் வாகனத்தை செலுத்துவது நன்று. 

5. அலட்சியம் செய்யாமல் வாகனத்தை செலுத்த வேண்டும்.

வாகனத்தில்  செல்லும்போது கைபேசியில் (செல் போன்) பேசிக்கொண்டே ஓட்டகூடாது. குடிபோதையில் வாகனம் செலுத்தகூடாது. வேடிக்கை பார்த்துகொண்டோ, வேறுசிந்தனைகளுடன் வாகனத்தை செலுத்துவது தவறாகும்.

















சாலையை கடக்கும்போது இருபுறம் பார்த்து வாகனம் வரவில்லை என்பதை உறுதி செய்து பிறகு கடக்கவேண்டும்.















சாலையை கடப்பதற்கென்று குறிப்பிடப்பட்ட இடத்தில்மட்டும் சாலையை கடக்கவேண்டும்.

அரசு சார்பில் பல விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்படுக்கின்றன.  சாலை பாதுகாப்பு வாரம் என்று கடைபிடிக்கபடுகிறது. போகுவரத்து காவலர்கள் சாலை பாதுகாப்பு வாரத்தின் போது வாகனங்களில் இருந்து காற்று ஒலிப்பானை கழற்றுவது, முகப்பு விளக்குகளில் கருப்பு வண்ண தாளை(ஸ்டிக்கர்) ஒட்டுவது என செயல்படுகின்றனர். 

வாகனத்தில் புறப்படும்போது ஒருமுறை நம்மை அதிகம் நேசிக்கும் நாம் குடும்பத்தினரை கண்முன் நிறுத்தி விட்டு புறப்பட்டோமானால் நம் இலக்கை விபத்தின்றி அடைவோம்.

எது எப்படி இருப்பினும் மக்களாகிய நாம் முடிவெடுத்து விதிகளுக்கு உட்பட்டு வாகனத்தை செலுத்தினால் தான் விபத்துகளை தவிர்க்கமுடியும்.  


தோழமையுடன்
அல்போன்ஸ் சேவியர்

2 கருத்துகள்: