ரௌத்திரம் பழகு

மரம் நடுவோம்... உள்ள மரங்களை காப்போம்..

புதன், 2 மார்ச், 2011

இரத்ததானம் செய்வோம்

வணக்கம்

மீண்டும் ஒரு பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த பதிவில் இரத்ததானத்தின் தேவை, தகுதி, பலன்கள் பற்றி காண்போம்.

இரத்ததானத்தின் அவசியம்




இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு பல்வேறு நோய் தாக்குதலினாலும் , விபத்துகளினாலும், அறுவை சிகிச்சை போன்ற வேறு சில காரணங்களினாலும் உடலில் இரத்தம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.



 
குருதியின் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் குருதி தானம் முன்பைவிட அதிகரித்துள்ளபோதும், குருதி தேவைகள் நிறைவடைவதில்லை.
குருதி தேவைகளை நிறைவு செய்திட மனமுவந்து அனைவரும் குருதி தானம் செய்ய வேண்டும்.

 

 இன்னுயிர் காப்பவர் இறைவனுக்கு சமம்

நீங்கள் குருதி தானம் செய்வதால் ஒருவர் உயிரையே காப்பாற்றும் வாய்ப்பினை பெறுகிறீர்கள். அப்படியானால் நீங்கள் கடவுளுக்கு சமமானவர்தானே?




இரத்ததானம் செய்வதற்கான தகுதி
 

18 வயது முதல் 60 வயது வரை 45 கிலோவிற்கு மேல் எடையுள்ள ஆண்களும், பெண்களும் இரத்ததானம் செய்யலாம்.



இரத்ததானம் செய்வதால் நமக்கு ஏதேனும் பாதிப்பு உண்டா?

 # நமது உடலில் 5 முதல் 6 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. இதில் 350 மில்லி இரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. 

# இரத்ததானம் செய்ய 20 நிமிடம் மட்டுமே ஆகும். 30 நிமிடத்திற்கு பிறகு நாம் வழக்கம்போல் செயல்படலாம்.
 
#இரத்ததானம் செய்த 24 மணி நேரத்திற்குள் புது இரத்தம் நமது உடலில் உற்பத்தியாகிவிடும்.  

# 3 மாதத்திற்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம்.


இரத்ததானம் செய்வோர் அடையும் பலன்கள்

# இரத்ததானம் செய்வதால் இரத்த அழுத்தம் குறைகிறது. இதனால் மாரடைப்பு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

# இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

இரத்ததானம் எங்கே செய்யலாம்?

அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும், குருதி வங்கிகளிலும் இரத்ததானம் செய்யலாம். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிறப்பான பங்களிப்பை செய்துவருகின்றன. நானும் நண்பர்களுடன் இணைந்து

பேஸ்புக் மூலமாக ஒரு குழுவினை அமைத்து குருதி கொடையாளர்களை ஒருங்கினைத்துள்ளோம்.

http://www.facebook.com/home.php?sk=group_105137816233511&view=doc&id=107321579348468#!/home.php?sk=group_105137816233511&ap=1





குருதி தானம் செய்வோம்....ஒரு உயிரை காப்பதில் நமது பங்களிப்பை உறுதிசெய்வோம். 


நன்றியுடன்


அல்போன்ஸ் சேவியர்

3 கருத்துகள்:

  1. உங்கள் எண்ணம் என்றும் நீடித்து அசையாமல் தொண்டு தொடர என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு