ரௌத்திரம் பழகு

மரம் நடுவோம்... உள்ள மரங்களை காப்போம்..

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

எது சுதந்திரம்? ஏது சுதந்திரம்?

வணக்கம்



நாட்டின் 65வது சுதந்திரதினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் சுதந்திரதின கொண்டாட்டம் குறித்த எனது கருத்துக்கள் இங்கே...







நிச்சயம் நான் சுதந்திரதின கொண்டாட்டத்திற்க்கோ, இந்திய நாட்டிற்கோ எதிரானவன் இல்லை.

ஏது சுதந்திரம்?
 
ஆகஸ்ட் 15, சுதந்திரம் பெற்ற மக்களாக நாம் அங்கீகரிக்கப்பட்ட நாள், உண்மையில் இந்த நாளை கொண்டாடும் நிலையில்தான் நாமிருக்கிறோமா?


சுதந்திரபோரட்டத்தில் பல்வேறு இன்னல்களுக்கிடையே பலரது உயிர், உடமை தியாகத்திற்கு பலனாக கிடைத்த சுதந்திரத்தினை, சுதந்திரபோராட்ட தியாகிகளின் விரத்தை போற்றும்வகையிலும் கொண்டாடிவருகிறோம். நிச்சயம் அவர்களது வீரசெயல் நினைவுகூறத்தக்கது.



மறுக்கப்பட்ட நீதிகளை கடந்தகாலங்களில் அதிகமாக கண்டுவருகின்றோம். ஒரு போராட்டத்தின் மூலம் சுதந்திரம் அடைந்த நம்நாடு, ஒரு இனத்தின் சுதந்திரத்திற்கான போராட்டத்தை தடைசெய்ய வரிந்துகட்டி செயல்பட்டதை கண்டோம். சுதந்திர இந்தியாவில், சுதந்திரமாக நமது கருத்துக்களை வெளியிடக்கூடாது, மீறினால் சிறைவாசம்...


தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்பதற்காய், யாருக்கும் வாக்களிக்கவிரும்பவில்லை என்பவர்களும் வாக்களிக்கும்விதமாய் இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறைபடுத்திய ஒரு வழிமுறையான 49ஓ பயன்படுத்தியவர்களை நக்சலைட்டுகளா என சோதனைசெய்த ஆட்சியாளர்களை பெற்றபெருமை நம்மையே சேரும்...





இது இப்படி இருக்க அந்த சுதந்திரதினத்தையாவது சுதந்திரமாக கொண்டாடமுடிகிறதா நம்மால்? ஊடகங்களில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் செய்தி "சுதந்திரதின கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி, நாடுமுழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு, வரலாறுகாணாத பாதுகாப்பு." 



இதுதான் ஒரு நாடு சுதந்திரதினத்தை கொண்டாடும்முறையா?


எது சுதந்திரம்...

இப்படிப்பட்ட குறைகளை களைந்து மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுக்கும் ஆட்சியாளர்களை என்று நாம் பெருகின்றோமோ, நீதி சாதாரனமக்களுக்கும் என்று முறையாக கிடைக்கிறதோ, என்று மனிதர்கள் அனைவரும் சமமாக மதிக்கபடுகின்றனரோ, அச்சுறுத்தல் இன்றி என்று சுதந்திரதினத்தை கொண்டாடுகின்றோமோ? அதுவே நமக்கு சுதந்திரதினம்....

அதுவரை இந்த சுதந்திரதினம், சுதந்திரபோரட்ட தியாகிகளை நினைவுகூரும் நாளாக,சுதந்திரத்தை போற்றும் நாளாக மட்டுமே இருக்கும்.

அனைவருக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துகள்...

வந்தே மாதரம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக